டில்லி:

நாடு முழுவதும் இன்று  மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நுழைவு தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 45,338 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 6ந்தேதி மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 13 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய நிலையில், தமிழகத்தில் இருந்து 1லட்சத்து 14 ஆயிரத்துக்கு 602 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

இன்று தேர்வு முடிவு வெளியான நிலையில், நாடு முழுவதும்  13 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 7 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வை  தமிழகத்தில் இருந்து தமிழகத்தில் இருந்து 1லட்சத்து 14 ஆயிரத்துக்கு 602 பேர் எழுதிய நிலையில், 45,338  பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவிகித தேர்சியாகும்.

கடந்த ஆண்டு, 83.859 பேர் தேர்வு எழுதிய நிலையில், 32,570 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று 38.84 சதவிகிதம் எடுத்திருந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 0.71 சதவிகித தேர்ச்சி மட்டுமே  அதிகரித்துள்ளது.