கோலாலம்பூர்

சிய மகளிர் கோப்பை கிரிக்கெட் டி 20 போட்டியில் இந்தியா தாய்லாந்து அணியை தோற்கடித்தது.

ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் டி 20 போட்டிகள் மலேசியாவில் நடைபெறுகிறது.     இதில் இந்தியாவும் தாய்லாந்தும் மோதின.   டாசில் வெற்றி பெற்ற தாய்லாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.   பேட்டிங்கில் களம் இறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய தாயலாந்து மகளிர் அணி இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை எதிர்கொள்ள இயலாமல் தவித்தது.   தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 66 ரன்களை எடுத்தது.   இதை அடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு நடந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 142 ரன்கள் வித்தியசத்தில் மலேசிய மகளிர் அணியை தோற்கடித்துள்ளது.

வரும் புதன் கிழமை இந்திய அணியும் வங்க தேச அணியும் மோத உள்ளன.

[youtube-feed feed=1]