புதுச்சேரி:
புதுச்சேரியில், இன்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி குறித்த அறிக்கையை முதல்வர் நாராயணசாமி சபையில் தாக்கல் செய்தார். அப்போது அதிமுக சசட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, இநத அரச மக்கள் நல திட்டங்கள் எதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. மக்களுக்கு 6 மாதம் மட்டுமே இலவச அரிசி போடப்பட்டுள்ளது. அதன்பிறகு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் முதியோர்களுக்கு பென்சன் தரப்படும் என அறிவித்திருந்த அரசு, இதுவரை. 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தும் ஒருவருக்குகூட புதிதாக பென்ஷன் தரப்படவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்றும் குறை கூறினார்.
இதையடுத்து, அவரை தொடர்ந்து பேச அனுமதிக்க சபாநாயகர் மறுத்தார். ஆனால், அதிமுகவினர் அதை ஏற்காமல், அரசுக்கு எதிராக பேனர்களை தூக்கி காட்டினர். அந்த பேனரில் இலவச அரிசி எங்கே? முதியோர் பென்ஷன் எங்கே? ஏமாற்றாதே, ஏமாற்றாதே, மக்களை ஏமாற்றாதே என எழுதப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார்.