சென்னை

மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியத்தை தமிழக அரசு 177% உயர்த்தி உள்ளது.

தமிழக அரசு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தது.   அதன் பிறகு மத்திய அரசு ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களின் ஊதியத்தையும் நீதிபதிகள் ஊதியத்தையும் உயர்த்தியது.   தற்போது தமிழக அரசு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வை அளித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி அனைவருக்கும் 177% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.   அதன்படி தற்போது ரூ. 90,000 மாத ஊதியம் பெறும் ஆணைய தலைவர்  இனி ரூ. 2.5 லட்சம் மாத ஊதியம் பெறுவார்.    உறுப்பினர்கள் தற்போது பெற்று வரும் மாத ஊதியமான ரூ.80000 க்கு பதில் ரூ.2.25 லட்சம் மாத ஊதியம் பெறுவார்கள்.

இதைத் தவிர ஆணையத் தலைவர் அரசு அளித்த இல்லத்தை உபயோகப்படுத்தவில்லை எனில்  மொத்த ஊதியத்தில் 24% தொகையை வீட்டு வாடகைப் படியாக பெறுவார்