சென்னை:

மலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயர் மற்றும் கொடி சின்னம் குறித்து  யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21ம் தேதி நடந்த மதுரை பொதுக் கூட்டத்தில்,மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில்  கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிவித்தார். அதைத்தொடர்ந்து  கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்  கொடுத்திருந்தார்.

அந்த விண்ணப்ப மனுவை  தேர்தல் ஆணையம். பரிசீலனைக்கு ஏற்று,  மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி  பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், மே 31-க்குள் தெரிவிக்கலாம் என்று செய்தித்தாளில் விளம்பரம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்தவித ஆட்சேபனையும் வரவில்லை என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதன் காரணமாக கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வது  தொடர்பாக வரும் 20ம் தேதி கட்சி நிர்வாகிகள் நேரில் ஆஜராக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்தே மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.