“இளையராஜாவும் ஜூன் 3ம் தேதிதான் பிறந்தார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று என்பதால் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதியே கொண்டாடுகிறார்” என்று ஒரு பதிவு கடந்த சில வருடங்களாகவே முகநூல் உட்பட சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இது போன்ற ஒரு பதிவுக்கு மூத்த பத்திரிகையாளர் திருவேங்கிமலை சரவணன் அளித்த பின்னூட்டத்தில், “கருணாநிதியால் பத்ம விருது கிடைத்தும் அதற்காக அவருக்கு இளையராஜா நன்றி செலுத்தவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்

திருவேங்கிமலை சரவணன் அவர்களது அந்த பின்னூட்ட பதிவு:

“ கலைஞருடன் ஏறக்குறைய ஒரு கால் நூற்றாண்டு காலம் பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன்.கலைஞர் திரைத்துறையில் 1951 இருந்தே கொடிகட்டி பறந்து வந்தவர்.இவர் திரையுலகில் நுழைவதற்கு முன்பே இரண்டு முறை முதல்வராகி விட்டார்.கலைஞர் பிறந்த நாள் அன்று கூடுவது தி.மு.க.தொண்டர்கள்.இளையராஜா இசையை ரசிப்பார்களே தவிற தமிழ் நாடு முழுக்க இருந்து அவர் ரசிகர்கள் வந்து வாழ்த்துபது இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் நுழைத்தவுடன் இளையராஜாவின் புகழ் படிப் படியாக குறைய ஆரம்பித்தே விட்டு.கலைஞர் அப்படியல்ல கடந்த 50 ஆண்டுகளாக தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருப்பவர். அவருக்கு இசைஞானி பட்டம் கொடுத்தவர் கலைஞர்.கலைஞர் முதல்வராக இருந்த போது 83 அல்லது 86 தெரியவில்லை அவர் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வரி கேள்வி ஓரே வரியில் பதில் சொல்ல வேண்டும். நான் பேட்டி காண போய் இருந்தேன்.

அப்போது குமுதம் உதவி ஆசிரியராக இருந்த நண்பர் கிருஷ்ணா டாவன்ஸி இளையராஜாவின் தீவிர ரசிகர் இளையராஜாவிற்கு ஏன் இன்னும் பத்ம விருது வழங்கவில்லை என்று கேட்கச் சொன்னார்.நானும் கேட்டேன் கலைஞர் உடனே நான் தான் இசைஞானி விருது ஏற்கனவே வழங்கிவிட்டேன் என்றார். ஆப் த ரெக்கார்டாக ஏ.ஆர்.ரஹ்மான் Padma sri பட்டம் வாங்கி விட்டார்.அவரை விட சீனியர் இளையராஜாவிற்கு வழங்க வில்லை என்றேன்.

அப்போது தி.மு.க.கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மத்திய அரசை ஆண்டது.கலைஞர் மத்திய அரசுவிற்கு கடிதம் எழுதினார.இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் பட்டம் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.அதன் அடிப்படையில் இளையராஜாவிற்கு விருது கிடைத்தது.

இசைஞானி மரியாதைக்கு கூட அன்றைய முதல்வர் கலைஞருக்கு நன்றி சொல்ல வில்லை.

கலைஞரின் உறவினர் தான் இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவும்.மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இவர்கள் எல்லாம் திரை இசையில் கொடி கட்டிப் பறந்தவர்கள்.அவர்களுக்கெல்லாம் பத்ம விருது வாங்கித் தராத கலைஞர்.இளையராஜாவிற்கு வாங்கி கொடுத்து இருக்கிறார்.பொறாமை பட்டு இருந்தால் இதை செய்து இருப்பாரா ?,

இளையராஜாவின் இசையை கேட்க லட்ச கணக்கான ரசிகர்கள்.ஆனால் கலைஞருக்காக உயிரை கொடுக்க லட்சக் கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.இது தான் இருவருக்கும் உள்ள வேறுபாடு.கலைஞரை யார் வேண்டாலும் எளிதில் சந்தித்து பேச முடியும்.இளையராஜாவை அப்படி சந்திக்க முடியுமா ?

இருவரையும் ஒப்பிட்டு எழுதியதே தவறு.அவர் வேறு துறை.இவர் வேறு துறை.அரசியல் தலைவர் தொண்டர் புடை சூழ இருப்பதை விரும்புவார்கள்.இசை மேதைகள் தனிமையும்…அமைதியும் விரும்பவார்கள்.இன்றைக்கே வெளியூர் தி.மு.க.தொண்டர்கள் சென்னையில் குவிய ஆரம்பித்து விட்டார்கள்” என்று திருவேங்கிமலை சரவணன் குறிப்பிட்டுள்ளார்.