
அரசியலில் இருந்து நடிகர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டி வருபவர் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி. இந்த நிலையில் இன்று இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது:
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு வருத்தம் தெரிவிக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் கேட்டேன்.
அரசியலில் இருந்து நடிகர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களால் தீவிரவாதம் அதிகரித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel