சிங்கப்பூர்:
5 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியா, மைலேசியா, சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் லீ சீயன் லூங்கை சந்தித்து பேசினார்.
இஸ்தானா மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, வணிகம், முதலீடு, தொடர்பு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில், இந்தியா – சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்
அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ((Nanyang Technical University)) மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, இந்தியா மற்றும் சீனா உலக வர்த்தகத்தில் நீண்ட நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும் என்றும் என்று தெரிவித்தார்.
நாம் ஒன்றாக வேலை செய்யும் போது, நம் நேரத்தின் உண்மையான சவால்களை எதிர்கொள்ள முடியும். நாம் கிரகத்தை பாதுகாப்போம், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இணைய அச்சுறுத்தல்களிலிருந்தும் நம் மக்களை பாதுகாக்க முடியும்.
இந்தியாவும் சீனாவும் பன்னெடுங்காலமாக சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இதில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் இருந்தது கிடையாது. அதுபோலவே தற்போதும், உலக வர்த்தக உறவை மேம்படுத்துவதில் இருநாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
21 ஆவது நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும், ஆசிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஆசிய நாடுகள் உணர வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சமூகத் தடைகளை தகர்க்க உதவுவதால், அது மேலும் மலிவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.