சிங்கப்பூர்
அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2004 ஆம் வருடம் உலகின் அதிக நேரம் பயணம் செய்யும் விமான சேவையை அறிமுகம் செய்தது. ஏர்பஸ் 340-500 ரக நான்கு எஞ்சின் விமானம் கொண்ட இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு நேரடியாக இயக்கப்பட்டது. இது அதிக நேரம் பயணிக்கக் கூடிய விமானமாக இருந்த போதிலும் வியாபார நோக்கத்துடன் செல்பவர்கள் இதை மிகவும் விரும்பினார்கள்., ஆனால் எரிபொருள் விலை ஏற்றத்தால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதனால் எரிபொருள் சிக்கனத்துடன் விரைவில் செல்லக்கூடிய அதிவேக விமான சேவை குறித்து நிர்வாகம் ஆலோசித்தது. அதன் முடிவில் வரும் அக்டோபர் மாதம் முதல் சிங்கப்பூர் – நியூயார்க் விமான சேவை ஒன்றை அறிமுகபடுத்த உள்ளது.
இது ஏர்பஸ் 350-900 ரக இரு எஞ்சின்கள் கொண்ட விமானமாக இருக்கும். இந்த விமான எஞ்சின்கள் மிக குறைந்த எரிபொருளில் அதிக தூரம் பறக்கும் சக்தி வாயந்தவை. இந்த விமானம் சுமார் 67 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளையும் 94 எகானமி கிளாஸ் இருக்கைகளையும் கொண்டதாக இருக்கும். இந்த விமானம் சுமார் 16700 கிமீ தூரத்தை சுமார் 18 மணி 45 நிமிடத்தில் சென்று அடையும்