டில்லி :

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-&18ம் ஆண்டில் 6.7 சதவீதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 4 ஆண்டுகளில் மிகவும் குறைவான வளர்ச்சி இதுவாகும்.

எனினும் கடந்த 7 காலண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளின் பொருளாதார வளர்ச்சி முறையே 5.6%, 6.3%, 7.0% என நிலையில் இருந்தது.

கடந்த நிதியாண்டில் விவசாயம் 4.5%, உற்பத்தி 9.1 %, கட்டுமானம் 11.5 % என்ற ரீதியில் வளர்ச்சி இருந்தது. கச்சா எண்ணை விலை உயர்வு, அலுமினியம், இரும்புக்கு அமெரிக்காவின் அதிகளவு வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.