மலேசியா:
5 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, இன்று மலேசியா சென்றார். அங்கு பிரதமர் மஹாதீர் முகமதுவை சந்தித்து பேசினார்.
இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, முதலில் இந்தோனேசியா சென்றார். தலைநகர் ஜகார்தாவில், அதிபர் ஜோகோ விடோடோவை மோடி சந்தித்து பேசினார்.
அப்போது, இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் கடற்பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஜகார்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள, கலிபாட்டா தேசிய வீரர்களுக்கான கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ராணுவம், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்தோனேசிய பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, அங்கிருந்து மலேசியா புறப்பட்டுச்சென்றார். தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ள மோடி மலேசிய புதிய பிரதமராக தேர்வு செயய்பட்ட மஹாதீர் முகம்மதுவை சந்தித்து பேசினார். பிரதமர் மகாதிர் தனது அலுவலகமான பெர்டானா புத்ரா காம்ப்ளக்சில் உள்ள புத்ராஜெயாவில் சந்தித்தார். அப்போது மோடி, மலேசிய புதிய பிரதமர் மஹாதீருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இரு நாட்டு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் செல்கிறார்.