டில்லி:
நாடு முழுவதும் கடந்த 28ந்தேதி 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில் 2 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி பெற்றி பெற்று உள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகாவில் ஆர்.ஆர்.தொகுதிக்கு நடைபெடறற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், மேகாலயாவில் அம்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. அந்த தொகுதியில் மியானி டி ஷீரா என்பவர் காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.
கேரளா மாநிலம் செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதியில்வ மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.