போபால்:
மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதில் விபரம்……..
‘‘கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம் ஒரு ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் குறித்து இதில் குறிப்பிடவில்லை.
எஸ்பிஐ வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 390 கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2 ஆயிரத்து 224 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடாவுக்கு ஆயிரத்து 928 கோடி ரூபாயும், அலகாபாத் வங்கிக்கு ஆயிரத்து 520 கோடி ரூபாயும், ஆந்திரா வங்கிக்கு ஆயிரத்து 303 கோடி ரூபாயும், யூசிஓ வங்கிக்கு ஆயிரத்து 224 கோடி ரூபாயும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த பதிலில், ‘‘ஐடிபிஐ வங்கிக்கு ஆயிரத்து 116 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ஆயிரத்து 95 கோடி ரூபாயும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ஆயிரத்து 84 கோடி ரூபாயும், பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு ஆயிரத்து 29 கோடி ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஆயிரத்து 15 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தவிர கார்பரேஷன் வங்கிக்கு ரூ.970.89 கோடியும், யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.880.53 கோடியும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு ரூ.650.28 கோடியும், சின்டிகேட் வங்கிக்கு ரூ.455.05 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி காரணமாக கனரா வங்கிக்கு ரூ.190 கோடியும், சிந்த் வங்கிக்கு ரூ.90 கோடியும், தீனா வங்கிக்கு ரூ.89 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.28 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.24 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.