டில்லி:
டில்லி தென்கிழக்கில் உள்ள மால்வியா நகரில் ரப்பர் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் ஆலை முழுவதும் தீ மளமளவென பரவியது.

தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 30 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel