லக்னோ:
உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராஜேஷ் ஷகானி இவர் இன்று காலை கோமதி நகரில் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது காரில் உள்ள துப்பாக்கியை எடுத்து வரும் படி உதவியாளரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து உதவியாளரும் துப்பாக்கியை எடுத்து வந்து ராஜேஷ் ஷகானியிடம் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த துப்பாக்கியால் சுட்டு ராஜேஷ் ஷகானி தற்கொலை செய்து கொண்டார். விடுமுறையில் சென்றவர் திடீரென அலுவலகம் வந்தது ஏன் என்று தெரியவில்லை. தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel