மும்பை:
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்டு தானே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்த இக்பால் கஸ்கர் நேற்றிரவு நெஞ்சு வலி காரணமாக மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் இக்பால் கஸ்கர் மீண்டும் தானே சிறையில் அடைக்கப்பட்டார்.
Patrikai.com official YouTube Channel