
சென்னை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கேரள ஆளுநர் சதாசிவம் இன்று சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் விவசாயிகள் பிரச்சினை, காவிரி பிரச்சினை போன்ற காரணங்களால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து, கவர்னர் புரோகித் நாளை தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட இடங்கள், மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
Patrikai.com official YouTube Channel