சென்னை
சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் உண்ணாவிரதத்தை நிறுத்தி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் இன்றும் இரண்டாம் நாளாக உண்ணா விரதத்தை தொடர்ந்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் கோரி வேல்முருகன் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.
அவருடன் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புக்களை சேர்ந்த 22 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேல்முருகனை சந்தித்தார். அப்போது அவருடைய உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு வைகோ வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று வேல்முருகன் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டார்.