விருதுநகர்:

ருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை   நிர்மலா தேவி விவகாரத்தில், அவருக்கு துணையாக இருந்து கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமியின் நீதி மன்ற காவல்  ஜூன் 11ம் தேதி வரை நீட்டித்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த பேராசிரியர் முருகன், மற்றும் ஆராயச்சி பிரிவு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்கள் இருவரையம், விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர்களின் காவலை  ஜூன் 11 வரை நீட்டித்து, 2 பேரையும் மீண்டும் சிறையிலடைக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி உத்தரவை பிறப்பித்துள்ளார்.