சென்னை:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை சென்ன மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேமுதிகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தேமுதிகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் டில்லியில் நாடாளுமன்றம் அருகே தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்,  ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.