சென்னை:
காடுவெட்டி குரு மறைவுக்கு ராகுல்காந்தி, திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வன்னியர் சங்க தலைவரும், பாமுன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு நேற்றிரவு உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ராகுல்காந்தி
அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து காடுவெட்டி குரு மனைவி லதாவுக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், ‘‘ உங்களது கணவரின் மரணம் எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தலைவராக இருந்த குரு அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பணியாற்றினார். இந்த இக்கட்டான தருணத்தில் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘காடுவெட்டி குரு மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் செயல்பட்ட காலத்திலும், 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
2011ல் தான் வெற்றி பெறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் வாக்குகளே காரணம் என்று நெகிழ்போடு தெரிவித்து நன்றி பாராட்டினார். அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் அப்பால் அவர் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேர்தல் களங்களில் அவர் என்னோடு நல்லிணக்கத்தோடு பணியாற்றியது நினைக்கூற தக்கதாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.