சென்னை:

தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், தற்காலிக அனுமதி சீட்டு மூலம் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் பதிவு செய்யப்படுவது கிடையாது.

இந்நிலையில், மோட்டார் வாகன சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பதிவு செய்யும் பேருந்துகளில் படுக்கை வசதி, படுக்கை மற்றும் இருக்கை வசதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொலை தூரம் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் படுக்கை வசதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும். படுக்கை வசதி பேருந்துகளுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.