சென்னை:
வங்கி மோசடி புகார் காரணமாக, பிரபல கனிஷ்க் நகைகடை நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
824 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கனிஷ்க் நகை நிறுவனம் 2008 முதல் 2016 வரை லாபத்தையும், இருப்பையும் அதிகமாகக் காட்டி போலி நிதி அறிக்கை தயாரித்து வங்கிகளில் கடன் பெற்தாக சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து டில்லியில் உள்ள சிபிஐ இணை இயக்குநருக்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
பாரத ஸ்டேட் வங்கி, பிஎன்பி வங்கி,, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் கடன் பெற்று கனிஷ்க் நிறுவனம் மோசடி செய்திருந்தது.
இது தொடர்பாக, வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடித் தடுப்பு பிரிவில் கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார், அவரது மனைவியும் நிறுவனத்தின் இயக்குடு வந்தனர்.
விசாரணையில், வங்கிகளில் பெற்ற கடனின் மூலம் வெவ்வேறு தொழில்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சென்னை அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமாரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். நீதிபதியின் உத்தரவை அடுத்து ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் பூபேஷ்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கனிஷ்க் நிறுவனத்தின், மதுராந்தகத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பிலான அவரது சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.