சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் மானிய கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கொறடா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 28ஆம் தேதி . மாலை 5 மணிக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு திமுக கொறடா சக்கரபாணி அறிவித்து உள்ளார்.