டில்லி
பாஜக மீண்டும் அரசு செய்வதை 47% பேர் விரும்பவில்லை என் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
வரும் 2019ஆம் வருடம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகளில் அனைத்துக் கட்சிகளும் தற்போதே இறங்கி உள்ளன. டில்லியை சேர்ந்த இரு ஆய்வு நிறுவனங்கள் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளன. இந்த ஆய்வில் 19 மாநிலங்களில் உள்ள 15859 வாக்காளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வறிக்கையின் மூலம் சுமார் 47% வாக்காளர்கள் மோடி அரசு மீண்டும் மலர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 39% மட்டுமே பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த வாக்காளர்களில் 5 இல் 2 பங்கு வாக்காளர்களே பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க விரும்புகின்றனர்.
மாநில வாரியான முடிவுகள் இதோ
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு 34%, காங்கிரஸுக்கு 49% மற்றவர்களுக்கு 17% ஆதரவு கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவுக்கு பாஜகவுக்கு 39%, காங்கிரஸுக்கு 44% மற்றவர்களுக்கு 17% ஆதரவு கிடைத்துள்ளது.
உத்திரப் பிரதேச மநிலத்தில் பாஜகவுக்கு பாஜகவுக்கு 35%, காங்கிரஸுக்கு 17% மற்றவர்களுக்கு 53% ஆதரவு கிடைத்துள்ளது. இதில் மற்றவர்கள் என்பது சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணியை குறிப்பதாகும்
மாகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு பாஜகவுக்கு 48%, காங்கிரஸுக்கு 40% மற்றவர்களுக்கு 12% ஆதரவு கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு பாஜகவுக்கு 54%, காங்கிரஸுக்கு 42% மற்றவர்களுக்கு 4% ஆதரவு கிடைத்துள்ளது.
மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகளுக்கே பெரும்பான்மை கிடைத்துள்ளது.