திருப்பதி

திருப்பதி வெங்கடேச பெருமாளை இலவசமாக தரிசிக்க ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய கட்டண வழி மற்றும் இலவச தரிசன வழி என பல வழிகள் உள்ளன.  தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகமாக உள்ளது.  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 30 ஆயிரம் தரிசனக் கட்டண டிக்கட்டுக்களும் மற்ற நாட்களில் 17 ஆயிரம் டிக்கட்டுகளும் வழங்கப்படுகின்றன.

இலவச தரிசனம் செய்வோருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு அன்றே சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு இலவச தரிசனம் பெற ஆதார் அவசியம் என தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.