ஜெய்ப்பூர்

ரும் சனிக்கிழமை முதல் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ய உள்ள ராஜஸ்தான் அரசு அதற்கான நிதிக்காக ரூ. 5000 கோடி கடன் வாங்க உள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாநிலமெங்கும் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.   அதை ஒட்டி வரும் சனிக்கிழமை முதல் ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய அரசு உத்தேசித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள 29 லட்சம் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யவேண்டிய கடன் ரூ. 8000 கோடி ஆகிறது.  அதனால் அரசு ஒதுக்கீடு செய்த ரூ. 2000 கோடி மிகவும் குறைவாக உள்ளதால் அரசால் தற்போது கடன் தள்ளுபடி செய்ய நிதி இல்லாமல் உள்ளது.  அதை ஒட்டி தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் அஜய் சிங் கிலக், “அரசு ஏற்கனவே விவசாயக் கடன் தள்ளுபடிக்காக ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.   அதைக் கொண்டு  சில விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.  தற்போது மேலும் விவசாயக் கடன் தள்ளுபடியை தொடர  நாங்கள் வங்கிகளில் இருந்து ரூ.5000 கோடி கடன் வாங்க உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

இந்த வங்கிக் கடனையும் சேர்த்தாலும் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு இன்னும் ரு.1000 கோடி தட்டுப்பாடு உள்ளது.  அதற்காக அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை.