பிரதமர் மோடி – நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே (பைல் படம்)

டில்லி:

ரசுமுறை பயணமாக நெதர்லாந்து பிரதமர் இன்று இந்தியா வந்துள்ளார். இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இன்று இந்தியா வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி நெதர்லாந்து சென்றிருந்த நிலையில்,  ஒரு வருடத்திற்குள் நெதர்லாந்து பிரதமர் இந்தியா வந்துள்ளனார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ஏற்கனவே கடந்த  2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முறைய வந்திருந்தார். தற்போது அவர் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள மார்க் ருட்டே, அதைத்தொடர்ந்து டில்லியில் நடைபெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில்  பங்கேற்க உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.