தூத்துக்குடியில் காவலத்துறையினா் இணையதள சேவையை முடக்கிவிட்டு நள்ளிரவில் வீடுகளுக்குள் சென்று இளைஞா்களை தாக்கி இழுத்துச்செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினா் செவ்வாய், புதன் கிழமைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவி உள்பட 13 போ் பலியானார்கள். தொடா்ந்து அங்கு பதற்றமான சூழலி நிலவி வருகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் 5 நாள்களுக்கு இணைதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு காவல் துறையினா் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து இளைஞா்களை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனாலும் இது குறித்த முழு விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.