சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் போலீசார் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளதாவது,
மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆரம்பத்திலேயே பிரச்னையை அரசு தீர்க்க வேண்டும் போராட்டத்தில் வன்முறை கூடாது, போராடுவதே வன்முறை ஆகிவிடாது.மக்கள் தேவைகளை தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நடிகர் சூர்யா கூறி உள்ளார்.