தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு பேர் பலியான நிலையில் இன்று காலை தமிழக முதல்வரை டி.ஜி.பி. சந்தித்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நூறு நாள் போராட்டத்தை அறிவித்த மக்கள், நேற்று நூறாவது நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர்.
அப்போது கலவரம் மூண்டது. இந்த நிலையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பதினோரு பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் வேறு வழியின்றியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடியில் இயல்வு வாழ்க்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.