புதுச்சேரி :
நாளை மறுதினம் (23ந்தேதி) கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து பதவி ஏற்பு விழாவில் பங்குபெற அரவிந்த் கெஜ்ரிவால் கர்நாடக வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி முதல்வர்கள், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவரகள் வருகை தர சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வருகை தர சம்மதம் தெரிவித்து உள்ளார்.