துபாய்

க்கிய அரபு அமீரக அரசு வங்கி மோசடியில் ஈடுபட்ட வின்சர் குழும விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

டைமண்ட் அவுஸ் வின்சம் குழுமம் என்னும் நிறுவனத்தின் பல நகைக்கடைகள் அமீரகம் எங்கும் உள்ளன.   இந்தக் குழுமத்தில் இரு நிறுவனங்கள்  இடம் பெற்றுள்ளன.   இந்த நிறுவனங்கள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் உள்ளிட்ட பல வங்கிகளில் கடன் வாங்கி திருப்பித் தராமல் உள்ளன.

இது குறித்து சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.  விசாரணையில் இந்த வின்சம் குழுமத்தில் உள்ள இரு நிறுவனங்களும் 15 வங்கிகளுக்கு  சுமார் ரூ.6800 கோடி வரை தரவேண்டி இருந்தது தெரிய வந்துள்ளது.   விஜய் மல்லையாவின் கடன் மோசடிக்கு அடுத்தபடியாக இந்த மோசடி உள்ளது.  இது குறித்து சிபிஐ மத்திய அரசு மூலம் அமீரக அரசின் உதவியை நாடியது.

அமீரகத்தில் உள்ள வங்கிகளில் இந்தக் குழும நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.   இந்த கோரிக்கையை அமீரக மத்திய வங்கிக்கு  அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது.   அதை ஆராய்ந்து மத்திய வங்கி அளித்த பதில் அனுப்பியது.   அதை ஒட்டி அமீரக அரசு இந்தக் குழுவின் வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரஙக்ளையும் இந்தியாவுக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.