டில்லி:
டில்லியில் 15 வயது சிறுமி ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள கோர சம்பவம் நடைபெற்று உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 12 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் பல இடங்களில் தூக்கி எறியப்பட்டுள்ளது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கொலை செய்யப்பட்டவர், வீட்டு வேலை செய்து வந்த சிறுமி சோனிகுமாரி என்பது தெரிய வந்தது.
சோனிகுமாரியை, மன்ஜித் என்பவர் வீட்டு வேலை வாங்கி தருவதாகவும், அதன் காரணமாக நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறி ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து டில்லி அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துள்ளார். ஆனால் அந்த சிறுமிக்கு வழங்கப்படும் சம்பளத்தை மன்ஜீத் பறித்து வைத்துள்ளார். கடந்த 3 வருங்களாக இந்த சம்பவம் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி கடந்த ஒரு வருடத்திற்கு முன் வேலையை விட்டுவிட்டு மன்ஜித் வசித்து வரும் பகுதியான கர்கெட்டா சென்று தனது சம்பள பணத்தை கேட்டு வந்து உள்ளார்.
இந்நிலையில் டில்லி மியான் வாலி நகரில் உள்ள ஒரு வாய்க்காலில் சிறுமியின் உடல் துண்டு துண்டாக கிடப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதிகளில் உள்ள சுமார் 200 வீடுகளின் சிசிடிவி காமிரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டது, சோனி குமாரி என்ற சிறுமி என்பது தெரிய வந்தது. அதை சிறுமியை கொலை செய்தது மன்ஜித் என்பதும் உறுதிபடுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் மன்ஜித்தை தேடி வந்தனர். மன்ஜித் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா என்ற கிராமப்பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் மன்ஜித்தை கைது செய்து டில்லி அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சோனிகுமாரிக்கு மாதம் 6500 சம்பளம் கிடைத்தாகவும், அந்த பெண்ணை தான்தான் வேலைக்கு அமர்த்தியதால், அந்த சம்பளத்தை நானே வாங்கினேன்..ஆனால்,அந்த சிறுமி தன்னிடம் சம்பள பணத்தை கேட்டு தொல்லைப்படுத்தியதால் அவரை கொலை செய்தேன் என்று கூறி உள்ளார்.
அவரது உடல் அடையாளம் தெரியாதபடி இருக்கவே, 12 துண்டுகளாக வெட்டி வீசினேன் எனறும் கூறி உள்ளார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.