டில்லி:
ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி, ரஷ்யா புறப்பட்டு சென்றார். அங்கு சோச்சி நகரில் ரஷ்ய பிரதமர் புடினை சந்தித்து பேசுகிறார்.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய நிலையில் ரஷ்யா அதிபர் புடினின் அழைப்பை ஏற்று ரஷ்யா புறப்பட்டுள்ள மோடி, அங்கு சோச்சி நகரில் அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
அப்போது, அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது குறிதும், இந்தியா மற்றும் ரஷியாவுக்கு அதன் காரணமாக ஏற்பட உள்ள பொருளாதார பாதிப்புகள், பயங்கரவாத அச்சுறுத்தல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, பிரிக்ஸ் மாநாடு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் பேச இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
தனது ரஷ்ய பயணம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, ரஷ்ய மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், அதிபர் புடினை சந்திக்க இருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும், இந்த சந்திப்பினால் இருநாடுகளுக்கும் இடையேயான நட்புணர்வு மேலும் வலுப்பெறும் என நம்புவதாகவும் கூறி உள்ளார்.