டில்லி:

கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் ஸ்ரீராமுலு, எடியூரப்பா ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பாஜக.வின் பலம் 271ஆக குறைந்துள்ளது. சபாநாயகரையும் சேர்த்து 271 பேர் தான் உள்ளனர். பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்கள் தேவை.

பாஜக கட்சி கர்நாடகாவை பிடிக்க ஆசைப்பட்டு தற்போது தேவையில்லாமல் 2 எம்பி பதவிகளை இழந்துள்ளது என்றும், இந்த தொகுதிகளுக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. இதனால் பாஜக கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.