திருச்சி:

திருச்சி, கல்லுக்குழி சுப் ராயலு வீதியை சேர்ந்தவர் ரஜினி குமாரி. (வயது 35). ரெயில்வே ஊழியர். இவரது கணவர் ரஞ்சித் குமார் (வயது 37). ராணுவ வீரர்.

இவர் நேற்று திருச்சி வந்தார். இன்றிரவு மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் கை துப்பாக்கியால் மனைவியை சுட்டு விட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரஜினி குமாரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.