சென்னை:
மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருந்த அனைத்து கட்சி கூட்டத்தை திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் புறக்கணித்த நிலையில், பாமக அன்புமணி, டி.ராஜேந்தர், டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செல்வன் மற்றும் விவசாய அமைப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நடைபெற்றன. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் புதிதாக சிற்றணை, தடுப்பணைகள் கட்ட வேண்டும், ஏரி குளங்கள் தூர் வாரப்பட வேண்டும் என்பன உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், “இந்த ஆலோசனை கூட்டம் குறித்த புரிதல் ஸ்டாலினுக்கு தெரிந்திருந்தால், அவர் இப்படி சொல்லி இருக்க மாட்டார்..வராமல் இருந்திருக்க மாட்டார் …இந்த கூட்டமே முடிவு அல்ல…அடுத்தகூட்டத்தில் அவர் வரலாம் என தெரிவித்து உள்ளார்.
ரஜினி கலந்துகொள்ளாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ” நீங்கள்அரசியல் கட்சி தொடங்கி விட்டீங்க….நான் இன்னும் அரசியல் கட்சி துவங்காததால், கூட்டத்திற்கு வர இயலாது’ என ரஜினி தெரிவித்த தாக கமல் கூறினார். ஆனால் ரஜினி இந்த கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும் எனவும் கமல் தெரிவித்து உள்ளார்
மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். மேலும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் அழைப்பு விடுத்தார். ஆனால், திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கமலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.