பெங்களூரு:

ர்நாடக எம்எல்ஏவாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக பாஜ சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

எடியூரப்பா கடந்த 2014ம்ஆண்டு முதல் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். அவருடன் கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற ஸ்ரீராமலுவும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.