பெங்களூர்:
இன்று மாலை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளில் வெற்றி பெற்றுள்ள லிங்காயத்து சமூக எம்எல்ஏக்கள், எடியூரப்பாவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று மடாதிபதிகள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு பெற்றுள்ள பாரதியஜனதாவை ஆட்சி அமைக்க கர்வர்ன வஜுரா வாலா அழைப்பு விடுத்து முதல்வராக எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரதியஜனதாவின் அத்துமீறல் என்றும், நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்து வருவதற்கான அறிகுறி என்றும், அரசியல் சாசனத்தை மீறிய செயல் என்றும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு உச்சநீதி மன்றம் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் 17 சதவிகிதம் அளவிலானோர் லிங்காயத் சமூகத்தினர் என்று கூறப்படுகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த 20 பேர் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போதைய முதல்வர் எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த மாற்றுக்கட்சிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் எடியூரப்பாவுக்கே வாக்களிக்க வேண்டும் அல்லதுரு, அல்லது லிங்காயத்து மக்களிடம் சொல்லி நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள் என்று மடாதிபதிகள் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஒருசில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜ கையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது லிங்காயத்து சமூக எம்எல்ஏக்களுக்கு மடாதிபதகள் எச்சரிக்கை விடுத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார்களா….? பொறுத்திருந்து பார்க்கலாம்..