பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற  தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று வருகிறார்கள். இந்நிலையில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வரவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜ, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாளம் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் இன்று விதான் சவுதாவில் உள்ள சட்டமன்ற அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.

அவர்களுக்கு சட்டசபை சபாநாயகர் போபையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இந்நிலையில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு இதுவரை வரவில்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் எங்கு உள்ளார்கள், இன்று பிற்பகலாவது சட்டமன்றத்திற்கு வந்து, பதவி ஏற்று உடனே நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இன்று மாலை   கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பாக  இன்று மாலை உச்சநீதி மன்ற உத்தரவுபடி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேவேளையில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்றும் கூறி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் இதுவரை சட்டமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.