கர்நாடக இந்நாள் – முன்னாள் முதல்வர்கள் பதவி ஏற்ற காட்சி

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி, விதான் சவுதாவில் உள்ள சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் போபையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, தற்போதைய முதல்வர் எடியூரப்பா ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

பொதுவாக ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக எம்எல்ஏவாக பொறுப்பேற்பது வழக்கம். ஆனால்,  இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு இரண்டு எம்எல்ஏக்களாக பதவி ஏற்பு நடைபெற்றது. வேகமாக பதவி ஏற்க வேண்டும் என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பதவி ஏற்கும் முறை பின்பற்றப்படுவதாக கூறப்பட்டது.

உச்சநீதி மன்றம் போபையா நியமனத்தை ரத்து செய்ய மறுத்துவிட்ட நிலையில், இன்று காலை 11  மணி முதல் சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக கர்நாடக சட்டமன்றத்துக்கு வந்த சித்தராமையா, தாங்கள் பலத்தை நிரூபிப்போம் என்றார். அவரைத் தொடர்ந்து இரண்டு பேருந்துகளில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அதுபோல பாஜ சட்டமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புடன் சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.