டில்லி:

டில்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 52வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி டில்லி அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

போட்டியின்போது டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி,  பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன் காரணமாக டில்லி அணி மட்டையுடன் களத்தில் இறங்கயிது. தொடக்க ஆட்டக்கார்களாக  ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர்  களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய  ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அவர்  26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி   டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களத்திற்குள் இறங்கியது. தொடக்க ஆட்டக் காரர்களாக வாட்சன், ராயுடு ஆகியோர் களமிறங்கினர். ஆனால் அவர்களால் ரன்களை எடுக்க முடியவில்லை. 5 ஓவர்கள் முடிவில் வெறும்  22 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் 6-வது ஓவரில்  ராயுடு 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக விளையாட்டு சூடுபிடித்து. ஆனால், அமித் மிஷ்ரா வீசிய 7-வது ஓவரின் 5-வது பந்தில் வாட்சன் வெளியேறினார்.  சிறப்பாக விளையாடிய ராயுடு 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே ராயுடு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கினார். சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டம் சோபிக்காமல் நிதானமாக நடைபெற்றது.

தோனி, ரெய்னா இருவரும் நிதானமாகவே  விளையாடி வந்தனர். இந்நிலையில், 14-வது ஓவரினிபோது ரெய்னா ஆட்டமிழந்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் நடையை கட்டினார். இதன் காரணமாக சென்னையின் ஸ்கோர் அதள பாதாலத்திலேயே இருந்தது. 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

18-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஒவரின் கடைசி பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். அவர் போல்ட் வீசிய 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஹர்சல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.