பிக்பாஸ்-2 சீசனில் பிரபல இலக்கியவாதியும், முன்னாள் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டுவரும் நாஞ்சில் சம்பத் ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ்-2 சீசனிலும் அவரை கலந்துகொள்ள சேனல் நிர்வாகம் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ள நிலையில், இந்த சீசனில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி அரசியல், சமூக பிரபலங்களையும் கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ்-2 சீசனை கமல்தான் தொகுத்து வழங்குகிறார் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட நிலையில், நாஞ்சில் சம்பத்தும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல பிரபல எழுத்தாளர் சாரு நிவேதாவையும் சம்பந்தப்பட்டவர்கள் சந்தித்து பேசியிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது… எது உண்மையோ ஜூன் 25ந்தேதி தெரிந்துகொள்வோம்…