டில்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக, கேரள மாநில அரசுகள் சார்பில் காவிரி வரைவு திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியது. அதை உச்சநீதி மன்றம் நிரகரித்து உள்ளது.
காவிரி தொடர்பான மத்திய அரசின் திருத்த வரைவு திட்டம் தாக்கல் நேற்றை விசாரணையின்போது உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரைவு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
அதைத்தொடர்ந்து மாநில அரசுகள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கேரளா 15 சதவிகித செலவினங்களை ஏற்க மறுத்தது. அதுபோல கர்நாடகா சார்பில், அணையில் உள்ள நீர் இருப்பை தெரிவிக்க மறுத்தும், காவிரியில் நீர் திறந்துவிடும் அதிகாரம் மாநிலத்திற்கே வேண்டும் என்று முரண்டு பிடித்தது. மேலும், காவிரி நீர் ஆணையம் என பெயரிடமும் கோரியது.
இந்த கோரிக்கைகளை உச்சநீதி மன்றம் நிராகரித்து உள்ளது.