டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு  வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி தொடர்பான  மத்திய அரசின் திருத்த வரைவு திட்டம் தாக்கல் நேற்றை விசாரணையின்போது உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாநில அரசுகள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கேரளா 15 சதவிகித செலவினங்களை ஏற்க மறுத்தது. அதுபோல கர்நாடகா சார்பில், காவிரியில் நீர் திறந்துவிடும் அதிகாரம் மாநிலத்திற்கே வேண்டும் என்று முரண்டு பிடித்தது.

அதுபோல தமிழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் என்றே அந்த அமைப்புக்கு பெயரிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்தது.

அதன்படி இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.