மதுரை:
மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு கட்டிட்த்தில் ஐசிஐசிஐ வங்கியின் கிளை உள்ளது. இன்று காலை அந்த கட்டிடததன் 2வது மாடியில் இருந்த திடீரென புகை கிளம்பி சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதைப் பார்த்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வங்கியின் முக்கிய ஆவணங்கள் எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறி உள்ளனர்.