
சென்னை
ஏடன் வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு சாகர் என பெயர் இடப்பட்டுள்ளது. தற்போது ஏடன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 400 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும் மேற்கு நோக்கி நகரத் தொடங்கி உள்ளது.
இந்த சாகர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவுகளிலும் கன மழை பெய்யும் எனவும் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏடன் வளைகுடா கடல் பகுதி மற்றும் தென் மேற்கு கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]