ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடும் முதல்வர் பழனிச்சாமி

ஊட்டி:

ட்டியில் இந்த ஆண்டு 122வது கோடை விழா இன்று தொடங்கியது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 அளவில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்களை தேடி செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் ஊட்டியில் மலர்க்கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறிகள் கண்காட்சி,  வாசனை திரவியங்கள் கண்காட்சி போன்றவை தோட்டக்கலைத்துறையால் நடத்தப்படுவது வழக்கம்.

இதன் காரணமாக  இந்த ஆண்டு கோடை சீசனின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் காட்சி இன்று தொடங்கியது. இந்த மலக்கண்காட்சியை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இன்று முதல் 5 நாட்களுக்கு ( 22ஆம் தேதி வரை) மலர்க்கண்காட்சி நடைபெறுகிறது.

மலர் கண்காட்சியை யொட்டி பல வகையான பூக்களை  கொண்டு அலங்கார வளைவுகள் செய்யப்பட்டுள்ளன.  185 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல வகையான பூக்களை கொண்டு மேட்டூர் அணை மாதிரி செய்யப்பட்டுள்ளது. மேலும் பூக்களை கொண்டு பெண் உருவம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

மிக்கி மவுஸ் உள்பட பல உருவங்கள் பல்வேறு பூக்களை கொண்டு செய்யபப்ட்டுள்ளதால் சுற்றுப்பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு சுமார்  1லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மலர் கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ரூ.1,850 கோடி மதிப்பீட்டினாலான குந்தா நீரேற்றுப் புனல் மின் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் ரூ. 7.49 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைக்க இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து  ரூ.10.85 கோடி மதிப்பீட்டில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 1,577 பயனாளிகளுக்கு ரூ.11.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மலர்க் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை பிற்பகலில் உதகை வந்தார். முதல்வரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கோத்தகிரியில் வரவேற்றார்.

மலர்க் காட்சித் தொடக்க விழாவில் முதல்வருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இன்று ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை முதல்வர் எடப்பாடி கொடைக்கானல் செல்கிறார்.