சென்னை:
குரூப்-1 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2016ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வு முறைகேட்டை மூடிமறைக்க அரசு முயற்சிக்கிறது. இதர தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்று உள்ளதா? என விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
2 தனியார் பயிற்சி பள்ளியில் பயின்ற 62 பேர் டி.எஸ்.பி, ஆர்.டி.ஓ பதவிகளில் நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பள்ளியின் கேள்வித்தாளில் இருந்து 60 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இது மிக பெரிய மோசடி. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் இருப்பது கண்டனத்திற்குரியது’’ என்று தெரிவித்துள்ளார்.